நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி - இருவர் கைது!
நுவரெலியா - கிரகரி வாவியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (19.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் கைது
விபத்து ஏற்பட்டதும், கவிழ்ந்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்த நிலையில், நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் எந்தவித காயங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இரு படகுகளை இயக்கிய சாரதிகள் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் பின்னர் அவர்கள் இன்று (20) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
