சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு! நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலியாவில் கொங்கிரீட் வேலையில் ஈடுபட்டிருந்த இருவர் 25 அடி உயர சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விருந்தகம் ஒன்றுக்கு மதில் கட்டும் பணியில் 9 பேர் ஈடுபட்டிருந்த நிலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து, மண்ணில் புதையுண்ட இருவர் குறித்த பகுதி மக்களால் மீட்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காலி - ஹில்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 25 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாளை சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் சடலங்கள் காலி எல்பிட்டிய பகுதிக்கு கொண்டு செல்லப்படும் என நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




