இருவேறு விபத்துக்களில் இருவர் பரிதாப மரணம்
இருவேறு இடங்களில் நேற்று(07.01.2026) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாவனெல்லை பிரதேசத்தில் கொழும்பு - கண்டி பிரதான வீதியில், கொந்தெனிய சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலையில் இருந்து மாவனெல்லை நோக்கிப் பயணித்த வான் ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நகர்வின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்
வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் வேன் சாரதி, அவரது மனைவி மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் காயமடைந்து, மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், வேன் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடுகன்னாவை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பு - தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேஸ்லைன் வீதியின் கீழ் தெமட்டகொடை மேம்பாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெமட்டகொடை சந்தியிலிருந்து இங்கம் சந்தி நோக்கிப் பயணித்த கொள்கலன் லொறி ஒன்று பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் உஹன பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நகர்வின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |