மன்னாரில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: சந்தேகநபர்கள் இருவர் கைது
மன்னார் - அடம்பன், முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (20.02.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 55 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் திகதி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஜேசுதாசன் அருந்தவராஜா மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த 56 வயதுடைய கணபதி காளிமுத்து ஆகியோரே உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam