யாழில் கடலில் குளிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவைச் பிறப்பிடமாக கொண்ட திருமணம் செய்து இளவாலையில் வசித்து வயது 37 வயதுடைய நபரும் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சிவனேசன் திபிசன் என்பவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.
பொலிஸார் விசாரணை
சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர், ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் அந்த விடுதியின் உரிமையாளரும், அங்கு பணி புரியும் இளைஞர் ஒருவரும், குறித்த விருந்தினரும் இன்று மாலை கடலில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு மற்றையவர் முயன்றுள்ளார். இந்நிலையில் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக தகவல் - கஜி

முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam