யாழ்.காரைநகரில் இரு கடற்படையினர் கைது
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். காரைநகர் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சந்தேகநபர் ஒருவரிடம் கஞ்சா இருந்த வேளை அவரை கைது செய்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கடற்படையினர் இருவருக்கு தொடர்பு இருப்பதானது கண்டறியப்பட்டுள்ளது.
தொலைபேசியில் தகவல்
இந்நிலையில், சந்தேகநபர் தனக்கு கஞ்சா வழங்கியதாக இருவரின் தொலைபேசி இலக்கங்களை அவர் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.
கஞ்சாவுக்கான பணம் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் கஞ்சாவுக்கான பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கஞ்சாவை உடமையில் வைத்திருந்தவர் விநியோகித்தர்கள் இருவருக்கும் தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.
தொலைபேசித் தகவலையடுத்து அதற்கானப் பணத்தைப் பெற இருவர் வந்து கஞ்சாவை உடமையில் வைத்திருந்தவரிடம் பணத்தைப் பெற முயன்ற தருணத்தில் மறைந்திருந்த பொலிஸார் பணத்தைப் பெற்றுக்கொள்ள சம்பவ இடத்துக்கு வந்த இருவரையும் கைது செய்துள்ளதுடன் இதன்போது அவர்களிடமிருந்து 1 கிலோ 340 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மடக்கி கைது செய்யப்பட்ட இருவரும் கடற்படையினர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |