மேலும் இருவர் கோவிட் - 19 தொற்றுக்கு பலி! - கண்டி உள்ளிட்ட இரு இடங்களில் மரணம் பதிவு
இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 534ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக இரண்டு கோவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
01.கண்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதான பெண்ணொருவர், தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். 02.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஆண்ணொருவர், கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 88524 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 85371 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
2619 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
