லண்டனிலும் ஊடுருவியது ஓமிக்ரான் மாறுபாடு! - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
லண்டனில் கோவிட் தொற்றின் புதிய திரிபான ஓமிக்ரான் மாறுபாட்டினால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.
பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட மூன்று வழக்குகளுக்கு மேலதிகமாக இன்று ஸ்காட்லாந்தில் ஆறு வழக்குகள் கண்டறியப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்காட்லாந்து அடையாளம் காணப்பட்டுள்ள வழக்குகளில், நான்கு லனார்க்ஷயர் பகுதியிலும், இரண்டு கிரேட்டர் கிளாஸ்கோ மற்றும் கிளைட் பகுதியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, புதிய மாறுபாட்டான ஓமிக்ரான் பரவலை கடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து அரசாங்க ஆலோசகர்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவுக்கும், பூஸ்டருக்கும் இடையிலான குறைந்தபட்ச இடைவெளியை மூன்று மாதங்களாகக் குறைக்க வேண்டும் என்று அந்த குழு கோரியுள்ளது.
இதன்படி, 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளை முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸுக்கு அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
