இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் மேலும் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது!
இலங்கையில் மேலும் இரண்டு கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மாத்தளை மாவட்டத்தில் உக்வெல் - பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் ஹிங்குரகொட சிறிகேத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினமும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு பின்னரான கலப்பகுதியில் கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் மாத்திரம் 997 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதையடுத்து நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மூன்று கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.