மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரு ஆண்கள் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(7.5.2026) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில் இரு சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதை சம்பவ தினமான இன்று மாலை 5.00 மணிக்கு கண்ட அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கி இருக்கும் இரு ஆண்களது சடலங்களை மீட்டனர்.

நீதிமன்ற அனுமதியை பெற்று சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam