கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் விசேட மது ஒழிப்பு பிரிவினரால் இருவர் கைது
கிளிநொச்சி - மலையாளபுரத்தில் 45 போத்தல் கசிப்புடன் இருவர் மாவட்ட பொலிஸ் விசேட மது ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட பொலிஸ் விசேட மது ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கசிப்பு மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மது உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஒருவரிடம் 25 போத்தல் கசப்பும், மற்றைய நபரிடம் 20 போத்தல் கசிப்பும் இருந்ததாகவும், இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
