இரகசிய தகவலின் அடிப்படையில் காட்டுப் பகுதியில் சுற்றிவளைப்பு: வசமாக சிக்கிய இளைஞர்கள் (Photos)
நாவற்காடு - கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (14.10.2023) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் நேற்று (14.10.2023) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள்
இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 760 லீட்டர் சட்டவிரோத கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அப்பகுதியை சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடைய இளைஞர்கள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






