மட்டக்களப்பில் ஒரே சமயத்தில் இரு அபிவிருத்தி கூட்டங்கள்: குழப்பத்தில் அரச அதிகாரிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு இராஜாங்க அமைச்சர்கள் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதனால் அரச அதிகாரிகள் எந்த கூட்டத்திற்கு சமூகமளிப்பது என தெரியாது குழப்பநிலை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு கூட்டம் (14.05.2023) ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மண்டபத்தில் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று(14.05.2023) பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் வர்த்தக இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் காலை 9.00 மணிக்கு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக மண்டபவத்தில் இடம்பெற்றது.
அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மை
இதனால் அரச அதிகாரிகள் எந்த கூட்டத்திற்கு சென்று சமூகமளிப்பது என திண்டாடியதுடன் ஏதோ ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டங்களையே திட்டமிட்டு செயற்படுத்த முடியாத அரச நிர்வாகமும் அரசியல்வாதிகளும் எவ்வாறு மக்களுக்கு தீர்வு பெற்று தரமுடியம் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே எதிர்காலத்தில் "மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே தான் இந்த அபிவிருத்தி குழுகூட்டம்" என்பதை அரசியல்வாதிகள் அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
