பொடி லெசிக்கு ஆதரவாக இரண்டு வழக்கறிஞர்கள் இந்தியாவுக்கு
இந்தியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெசி எனப்படும் ஜனித் மதுசங்கவுக்கு சட்ட ஆலோசனை மற்றும் பிணை பெறுவதற்காக இரண்டு சட்டத்தரணிகள் இந்தியாவுக்கு பயணமாகியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று(18.03.2025) பகல் அவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.
பேஷல கங்கோடராச்சி மற்றும் நவீன் ஜெயமன்னே ஆகிய இரண்டு வழக்கறிஞர்களே இவ்வாறு பயணமாகியுள்ளனர்.
பொடி லெசி
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள்,
“பொடி லெசி மீது இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கி பிணைக்கு விண்ணப்பிக்கவுள்ளோம்
இலங்கை பொலிஸார் தேடும் எந்தவொரு குற்றத்திற்காகவும் பொடி லெசி கைதுசெய்யப்படவில்லை.
மேலும், இலங்கையில் உள்ள பல நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் காணப்படுகிறது.
இந்திய சட்டத்தரணிகள்
அந்த வழக்குகளில் எதற்கும் அவருக்கு எதிராக எந்த பிடியாணைகளும் பிறப்பிக்கப்படவில்லை.
மேலும், இந்தியாவில் தங்கள் கட்சிக்காரரை ஏற்கனவே பல இந்திய சட்டத்தரணிகள் சிலர் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் அவருக்கு பிணை வழங்கப்பட்டால், இலங்கையில் பொடி லெசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழும்” என கூறியுள்ளனர்.
இதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் 21.03.2025 அன்று இந்தியாவின் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |