இலங்கையில் இரண்டு சட்டங்கள்! கர்தினால் குற்றச்சாட்டு

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples Cardinal Malcolm Ranjith
By Sivaa Mayuri Aug 13, 2022 04:56 PM GMT
Report

நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது என்று கொழும்பு பேராயர் மேல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,குற்றச்செயல்கள் தொடர்பான பல விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸினால்,வழங்கப்பட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு இன்று கட்டுவாப்பிட்டியில் இடம்பெற்றது.

இலங்கையில் இரண்டு சட்டங்கள்! கர்தினால் குற்றச்சாட்டு | Two Laws In Sri Lanka Cardinal Accusation

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு வாரங்களுக்குள் பயங்கரமான நிகழ்வுகள்

இரண்டு வாரங்களுக்குள் பயங்கரமான நிகழ்வுகளை மறந்து விடுகின்ற மோசமான பாரம்பரியம் இலங்கையர்களிடம் உள்ளது. இலங்கையில் காலங்காலமாக நடந்த கொலைகள், கொடூரமான தாக்குதல்கள், பேருந்து குண்டுகள், தொடரூந்து குண்டு தாக்குதல்கள், அரசியல் தலைவர்களின் கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர், வெள்ளை வேன் கடத்தல்கள் போன்றவற்றை மறந்துவிடும் போக்கு உள்ளது.

இலங்கையில் இரண்டு சட்டங்கள்! கர்தினால் குற்றச்சாட்டு | Two Laws In Sri Lanka Cardinal Accusation

இலங்கையின் நவீன வரலாற்றில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் எதுவும் எந்தவொரு அரசாங்கத்தினாலும் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. சில சமயங்களில் விசாரணைகள் அனுமதிக்கப்படவில்லை அல்லது மறைக்கப்பட்டு தாமதப்படுத்தப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. எனவே, நாட்டின் சட்டத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் சுயாதீனமாக இருக்க வேண்டும், காவல்துறையும் சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கொழும்பு பேராயர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் அழுத்தங்களால் அடிபணியும் பொலிஸார்

அரசியல் அழுத்தங்களுக்கு பொலிஸார் தொடர்ந்தும் அடிபணிய முடியாது எனவும்,மேலும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தற்போதுள்ள முறைமை மாற வேண்டும். நேர்த்தியான ஆடை அணிந்தவர்களுக்கு ஒரு சட்டமும், தெருவில் வேலை செய்பவருக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நாட்டை ஆளும் தலைவர்கள், நாட்டில் வெளிப்படையான நீதி முறைமையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US