வான் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் படுகாயம்! - சாரதி கைது(Photos)
திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் அக்போபுர மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால் இன்று(11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அக்போபுர பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளைக் கொழும்பிலிருந்து திருகோணமலை பகுதிக்குச் சென்ற வான் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தினை ஏற்படுத்திய வானின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வானின் சாரதியைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய்
நீதிவான் நீதிமன்றில் முன்னிறுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.





முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
