ஈச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்
வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரிலிருந்து ஈச்சங்குளம் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஈச்சங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் நீண்ட நேரமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படாமல் வீதியில் கிடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சில மணி நேரங்கள் தடைப்பட்டிருந்தது. விபத்து தொடர்பாக அவசர அம்புலன்ஸ் சேவைக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும் நீண்ட நேரமாக அம்புலன்ஸ் வராத நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு முச்சக்கரவண்டியூடாக குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
