வவுனியாவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்
வவுனியா, வைரவப் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (21.03.2024)) மதியம் வவுனியா, வைரபுளியங்குளம் தொடருந்து நிலைய வீதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
வவுனியா நகரப் பகுதியிலிருந்து தொடருந்து நிலைய வீதி ஊடாக சென்ற முச்சக்கரண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவப் புளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
