எதிர்காலத்தில் கடன் வழங்குவதற்கான நிபந்தனைகளுடன் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இருவர் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு அவர்கள் நாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
குறித்த தினத்தில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்திக்க உள்ளதுடன், செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க உள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய யோசனைத் திட்டமொன்றையும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சமர்ப்பிக்க உள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு சென்று கடன் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
May you like this Video

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
