ஓமந்தையில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிய இருவர் வைத்தியசாலையில்
வவுனியா - ஓமந்தை பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கடத்திச் சென்ற வாகனம் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற இராணுவத்தினர் மறித்துள்ளனர்.
எனினும் வாகனம் நிறுத்தாது சென்றமையால் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்தில் சேமமடு பகுதியை சேர்ந்த பிரசாத், சஜீபன் ஆகிய இருவரே காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதன்போது கைப்பற்றப்பட்ட மரங்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan