இரண்டு கனரக வாகனங்கள் மோதி விபத்து: மூவர் படுகாயம்(Photos)
நுவரெலியா - ஹட்டன் வீதியில் நானு ஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் இரண்டு கனரக வாகனங்கள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (27) மாலை 6.00 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான கனரக வாகனமொன்று பட்டிப்பொலயிலிருந்து கொழும்பு நோக்கி சிலிப்பர் மரக்கட்டையை ஏற்றிச் சென்ற போது செங்குத்தான ரதெல்ல குறுக்கு வீதியில் மற்றுமொரு கனரக வாகனத்தை முந்திச் சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மற்றைய கனரக வாகனமும் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு கனரக வாகனங்களிலும் பயணித்த இருவர் மற்றும் புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான கனரக வாகனத்தின் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி நகரப்பகுதியில் இன்று (28)மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி ஏ-9 வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.
[