நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு துப்பாக்கிகள் : அரசாங்கம் அறிவிப்பு
நாட்டில் எதிர்காலத்தில் அமைதியின்மை ஏற்பட்டால், சுய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் இந்த துப்பாக்கிகளை கொள்வனவு செய்து வைத்திருக்க முடியும் என விளக்கமளித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு
அரகலய போராட்ட உறுப்பினர்கள் குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வன்முறைகள், நாட்டின் மீது எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
24 மணித்தியாலங்களுக்குள் 72 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களும் ஜனாதிபதியின் நூலகமும் எரிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பதற்கான சதித்திட்டம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக இரண்டு துப்பாக்கிகளை வீட்டில் வைத்திருக்கும் அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக தற்போது வழங்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கிகளுக்கு மேலதிகமாக ரிபீட்டர் ரக துப்பாக்கிகளையும் வழங்குவதற்கான தீர்மானத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |