இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜேர்மனின் இரண்டு இராணுவ அதிகாரிகள்
இலங்கைக்கு பொறுப்பான, ஜேர்மனின் இரண்டு இராணுவ அதிகாரிகள், (கெப்டன் ஜெரால்ட் கோச் மற்றும் லெப்.கேனல் ஜோன் சிஹார்) ஆகியோர் 2021 ஒக்டோபர் 3 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜெர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்போது 3 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து தங்கியிருக்கவுள்ளதாக ஜெர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.
18 மாதங்களுக்கும் மேலாக தொற்றுநோய் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், ஏனைய நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜெர்மன் இராணுவ அதிகாரிகளின் இந்த வருகையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று 2022 ஜனவரி 9 முதல் 13 வரை, ஜேர்மனிய போர் கப்பலான "பேயரின்" இலங்கைக்கான வருகைக்கான திட்டத்தை தயாரிப்பதாகும் என்று ஜேர்மனிய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆசியாவுக்கான பயணத்தை 2021 ஆகஸ்ட்டில் ஆரம்பித்த, ஜெர்மனிய போர்க்கப்பல், 2022 பெப்ரவரியில் நாடு திரும்பவுள்ளது.
"பேயர்ன்" என்ற கப்பல் கொழும்புக்கு வரும் நிலையில், 2022 ஆம் ஆண்டு ஜனவரியில், இலங்கை கடற்படையுடன் கடலில் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.