தமிழகத்தில் இரு கடற்றொழிலாளர்கள் கடலில் மூழ்கி பலி
ராமேஸ்வரம் - மண்டபம் மேற்கு வாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிவதற்கு முன்பாகவே முறையான அனுமதி சீட்டு எதுவும் பெறாமல் நேற்று தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
விசாரணை
சுதர்சன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் ஐந்து கடற்றொழிலாளர்கள் சென்ற நிலையில் படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு சேதம் அடைந்துள்ளது.
இதன்போது படகானது கடலில் மூழ்கிய நிலையில் 3 கடற்றொழிலாளர்கள் அருகில் இருந்த படகொன்றின் மூலம் மீட்கப்பட்டு உயிருடன் கரையை அடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்திய கடலோர காவல்படை, உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
