முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மாதம் இரண்டு யானைகள் உயிரிழப்பு(Photos)
முல்லைத்தீவு -ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கடந்த மாதம் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காலில் குண்டுக்காயங்களுடன்
நடக்கமுடியாது குளக்கரையில் வீழ்ந்து கிடந்த யானை ஒன்றுக்கு
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில்
அந்த யானை உயிரிழந்துள்ளது.
குண்டுத்தாக்குதலில் காலில் காயமடைந்த காட்டுயானை கடந்த மாதம் 18.02.2022 அன்று இவ்வாறு குளத்திற்குள் வந்து விழுந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சிகிச்சையளிக்கப்பட்டு காட்டிற்குள் விடப்பட்ட காட்டுயானை மீண்டும் கடந்த 24.02.2022 அன்று நடக்கமுடியாத நிலையில் குளத்திற்குள் வந்து விழுந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினால் யானைக்குத் தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் யானை நேற்று உயிரிழந்துள்ளது.
வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவரின் பரிசோதனையின் பின்னர் யானையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த
15.02.2022 அன்று ஒதியமலை கிராமத்தில் மின்சார வேலியில் சிக்கி யானைபோன்று
உயிரிழந்துள்ளதுடன், நேற்று காலில் வெடிபட்டு சிகிச்சையளிக்கப்பட்ட
யானையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளன.






