இருவேறு இடங்களில் இரண்டு சடலங்கள் மீட்பு
கூரிய ஆயுதத்தினால், தாக்கி கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் உடல். பன்னல நகரில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் உள்ள அறை ஒன்றில் காணப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளியாப்பிட்டியவை சேர்ந்த பெண்ணின் சடலம்
குளியாப்பிட்டிய வீரம்புவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான திஸாநாயக்க முதியன்சலாகே விந்தியா நிரஞ்சனி திஸாநாயக்க என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த பெண் பன்னல நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தொழில் புரிந்து வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, உடனடியாக செயற்பட்டு சுவசெரிய அம்யூலன்ஸ் வண்டியில் பெண்ணை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல தயாராகியுள்ளனர். எனினும் ஏற்கனவே பெண் இறந்து விட்டதாக பன்னல பொலிஸார் கூறியுள்ளனர்.
கொலை செய்தவர் எனக் கூறபடும் சந்தேக நபர், தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களுத்துறை பன்விலயில் பழுதடைந்த நிலையில் ஆணின் சடலம்
இதனிடையே களுத்துறை பன்வில பிரதேசத்தில் வீடொன்றில் தலைக்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்தி வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்வில டெரஸ் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் துர்நற்றம் வீசுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அங்கு சென்று விசாரணைகளை நடத்திய பொலிஸார், வீட்டின் வரவேற்பறையில்,விழுந்து கிடந்த ஆண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
களுத்துறை பன்வில டெரஸ் பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான பீ.எம்.ருக்மால் நிஷாந்த என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நபர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெட்டுக்காயங்கள் இருப்பதால் சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
