போதைப்பொருளுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது
அம்பாறையில் நீண்ட நாட்களாக போதைப்பொருள் விற்பனை செய்வதாக சந்தேகித்து வந்த இரண்டு நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, குறித்த கைது நடவடிக்கை நேற்று(06.01.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உகண பகுதி திஸ்ஸபுர 21 கிராமத்திலிருந்து அம்பாறை நகரத்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கை
நேற்று (06) இரவு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மற்றொரு சந்தேகநபர் இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் கைதான இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதன்போது, 2101 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 8757 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதுடன், இருவரையும், அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri