தலங்கம - கொஸ்வத்த பேருந்து விபத்து
தலங்கம - கொஸ்வத்த பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகொடவில் இருந்து புறக்கோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் கடுவெலயில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களில் கடுவலயிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விவாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




