திருகோணமலையில் இரு நூல்கள் வெளியீட்டு விழா
நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கத்தின் " காலநதியின் சில துளிகள் " கட்டுரை நூலும் " வீரனாக்குவது எது? " மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட உள்ளது.
இந்த நூல்கள் வெளியீட்டு விழா எதிர்வரும் (27) ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.45மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
திருகோணமலை தமிழ்ச்சங்கத் தலைவர் மூத்த எமுத்தாளர் திருமலை நவம் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழகப் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக ஒய்வுநிலை நீதிமன்றப்பதிவாளர்களான எம்.எஸ். எம். நஸீர், கெ. தர்மகுலராஜா, அவர்களும் சிறப்புறும் ஆளுமையாக ஒய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் ஒ. குலேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நூல்கள் வெளியீட்டு விழா
இந் நிகழ்வில் வரவேற்புரையினை தனுஷ்கா சஞ்சிவனும் நூல் அறிமுகவுரையினை கவிச்சுடர் சிவரமணி , மற்றும் இ. கேசிகனும் நூல் மதிப்பீட்டுரையிணை இலக்கிய ஆய்வாளர் வ. முரளிதரனும், ஒய்வு நிலை நீதிமன்றப்பதிவாளரும் விமர்சகருமான எம். எஸ். எம். நியாஸ் அவர்களும் வழங்க , நீங்களும் எமுதலாம் இலக்கிய சிற்றிதலும் அதன் சார்பு இயக்கு நிலை பற்றி என்னும் தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. அச்சுதனும் உரையாற்றுவார்.
நிகழ்வினை அதிபர் சுஜந்தினி யுவராஜா தொகுத்து வழங்க நூலின் முதல் பிரதியை மூத்த எமுத்தாளர் சூசை எட்வேட் பெற்றுக்கொள்வார். கெளரவிப்பு நிகழ்வும் நூலாசிரியரின் ஏற்புரையும் இடம் பெறும்.



