சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 4.5 லீட்டர் கசிப்பு, 40 லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமான மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அச்சுவேலி
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாதரவத்தை - பொக்கணை பகுதியில் 30 லீட்டர் கசிப்புடன் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் (17.12.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில், சான்றுப் பொருட்களுடன் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
