யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூளாய் - வேரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் என தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
அத்துடன் பொன்னாலை தெற்கு, சுழிபுரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |