திருகோணமலையில் ஹெரோயினுடன் இருவர் கைது
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் நேற்று(14) மாலை 6 மணியளவில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டதாகத் துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் துறைமுக பொலிஸார் தெரிவிக்கையில்,
திருகோணமலை கடற்படையினருக்குக் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் துறைமுக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கிராம் 900 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பிறிதொரு நபருக்கு விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் முறையே 4ம் கட்டை,கண்டி வீதியைச்சேர்ந்த 23 நபரும்,ஜயசுந்தர மாவத்தை, 5ம் கட்டை, கண்டி வீதியைச்சேர்ந்த 23 வயதுடையவர்கள்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகத் துறைமுக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.






