யாழ்.வட்டுக்கோட்டையில் கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு்ள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு
காரைநகர் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 34 வயதுடைய இருவரே கஞ்சாவை எடுத்து சென்றபோது பொன்னாலை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 12 கிலோ 730 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri