சுதுமலையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இருவகையிலான 1600 போதை மாத்திரைகள்
இதன்போது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து கொக்காவில் பகுதியில் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைதானவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan