ஒரு தொகுதி முதிரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது(Photos)
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் இலுப்பைக்கடவை பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் வாகனம் ஒன்றில் பதுக்கிக் கொண்டு செல்லப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் மற்றும் மடு வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் இன்று (1) அதிகாலை 2.20 மணியளவில் இந்த மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஒன்றில் நெல் மூட்டைகளுக்குக் கீழ் பதுக்கி வைத்துக் கொண்டு செல்லப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சுமார் 22 முதிரை மரக்குற்றிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட முதிரை மரக்குற்றிகள், வாகனம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட இரு
சந்தேக நபர்களையும், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மடு வனவள பாதுகாப்பு
திணைக்கள அதிகாரிகள் இணைந்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








