முருங்கனில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
மன்னார் - முருங்கன் பிரதேசத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வீதி தடைக்கு அருகில் சென்ற சுமை ஊர்தியைச் சோதனையிட்ட பொலிஸார், 9.920 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு சுமை ஊர்தியில் ஐஸ் போதைப் பொருள் கடத்திச் செல்லப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக சோதனை சாவடியை ஏற்படுத்தி பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற சுமை ஊர்தியை பின் தொடர்ந்து சென்று நிறுத்தி நடத்திய சோதனையில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 42 வயதானவர்கள் எனவும் இவர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam