யாழில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் மீட்பு!
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குப் பெருந்தொகைத் தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இருவரைக் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(9.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இருவர் கைது
இதனையடுத்து, குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகளை மீட்டுள்ளனர்.
அத்தோடு, படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கடல் மார்க்கக் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வடக்குக் கடற்பரப்பில் கடற்படையினர் தமது கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.