மாணவியொருவரின் காணொளிக் காட்சிகளை வெளியிடப் போவதாக அச்சுறுத்திய இருவர் கைது
மாணவியொருவரின் காணொளிக் காட்சிகளை வெளியிடப்போவதாக அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் இரண்டு மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம்
குறித்த மாணவர்கள் இருவருடன் தொலைபேசி வழியாக அடிக்கடி உரையாடிய மாணவியொருவர், இவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் சிற்சில வேளைகளில் காணொளி அழைப்புகள் ஊடாகவும் உரையாடியுள்ளார்.
அவற்றைப் பதிவு செய்து வைத்துள்ள குறித்த மாணவர்கள் இருவரும், அவற்றை வெளியிடப் போவதாக மாணவியை அச்சுறுத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்த பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |