குருநாகலிருந்து அம்பாறைக்கு லொறியில் உரம் கடத்திய இருவர் கைது
குருநாகலில் இருந்து அம்பாறைக்கு அத்தியாவசிய சேவை என்ற பேரில் அரசு மானியமாக வழங்கிய உரத்தைச் சட்டவிரோதமாக லொறி ஒன்றில் கடத்திச் சென்ற இருவரை மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
,இதன்போது ,53 உரப்பாக் கொண்ட உரத்தை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான இன்று தாழங்குடா பகுதியில் இராணுவத்தினர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது அம்பாறை கல்முனை பகுதியை நோக்கி பிரயாணித்த லொறியை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் அரசு மானியமாக வழங்கிய உரத்தைச் சட்டவிரோதமாகக் கடத்தி செல்வதாகவும் கண்டறிந்ததையடுத்து அந்த வொறி சாரதி மற்றும் நடத்துநர் உட்பட இருவரை இராணுவத்தினர் கைது செய்ததுடன் அதிலிருந்து 53 உரப்பாக்குகள் கொண்ட உரத்தை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்தவர்களையும் மீட்கப்பட்ட உரைப்பைகள் மற்றும் லொறி என்பவற்றை
இராணுவத்தினர் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இவர்களை இன்று
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் 14
நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.


பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri