யாழில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும்,பணமும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் வீடு உடைக்கப்பட்டு ஆறு பவுண் நகையும், ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்று (22) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளையுடைய நபர்கள் என்றும் அவர்களிடம் இருந்து ஆறரைப் பவுண் நகை மற்றும் ஒரு தொகைப் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன்
தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri