வெருகல் போராட்டத்தில் கைதான நபர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கடந்த(13)ஆம் திகதி வெருகல் பிரதேச செயலகத்துக்கு முன் நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் (22.12.2025)மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறி உள்நுழைந்தமை, கடமையை செய்ய விடாது தடுத்தமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிணை
இதன்போது குற்றவாளிகள் தரப்பில் முன்னிலையாகிய சகிதீன் மற்றும் முகமட் ஆகிய சட்டத்தரணிகளால் பிணை விண்ணப்பம் கோரி சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 6 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, ஏனைய 17 பேரும் பொஸிஸாரினால் தேடப்பட்டு வருவதாகவும் அவர்களை சரணடைய செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் சட்டத்தரணி சகிதீன் தெரிவித்தார்.
மேலும், குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளது.
மேலதிக தகவல்-கியாஸ் ஷாபி