கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
கல்முனையில் விசேட அதிரடிப்படையினரால் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (11) அதிகாலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடைிப்படையாக கொண்டே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு தொகை கேரளா கஞ்சா கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதனை தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் இரு சந்தேகநபர்களும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 43 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களும் மத்திய முகாம், கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
குறித்த கேரளா கஞ்சா கிளிநொச்சி பகுதியில் இருந்து பேருந்து ஊடாக கடத்தப்பட்டு பின்னர் மோட்டார் சைக்கிள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
