யாழ். நாவற்குழி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!
யாழ். நாவற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்துவந்த தாயையும் மகனையும் தாக்கிவிட்டு கொள்ளையடித்து சென்ற சந்தேகநபர்கள் இருவரை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கடந்த 2ம் திகதி நாவற்குழியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த தாயையும் மகனையும் இவர்கள் தாக்கியுள்ளனர்.
இந்தநிலையில் தாயும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து 23 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு தெல்லிப்பழை பகுதியில் 32பவுண் நகை திருட்டுடனும் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 14 மணி நேரம் முன்

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா Cineulagam
