ஜேர்மன் மற்றும் கனடா செல்ல முயற்சித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது
டுபாய் ஊடாக ஜேர்மன் மற்றும் கனடாவுக்கு செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி விசா பயன்படுத்தி செல்ல முயற்சித்த இருவரையும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கனடா செல்ல முயற்சித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற சாவகச்சேரியை சேர்ந்த 35 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் போலி விசாவை பயன்படுத்தி ஜேர்மன் செல்ல முயற்சித்தவர் 29 வயதான பருத்தித்துறையை சேர்ந்த பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் டுபாய் நோக்கி செல்லும் ப்ளே டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
கனடாவுக்கு செல்லும் நபரிடம் இருந்த கடவுச்சீட்டு வேறு ஒருவருடையதென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஜேர்மன் செல்ல முயற்சித்த பெண்ணின் விசாவில் போலி தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த போலி விசா மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கிடைத்துள்ளது. அதற்காக அவர் 10 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம் News Lankasri