புத்தளத்தில் கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகள் கடத்திச் சென்ற இருவர் கைது (photos)
புத்தளத்தில் கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (09.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - எலுவாங்குளம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரும், புத்தளத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவருமே கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
இந்த கைது நடவடிக்கையின் போது 4 உரைப்பைகளில் 239 கிலோகிராம் கடலட்டைகளும் 19 உறைப்பைகளில் 921 கிலோகிராம் எடையுடைய சுறா சிறகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லொறிகளையும் கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
