யாழில் பட்டாசு கொளுத்திய இருவர் கைது!
யாழில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில நேற்று வெள்ளிக் கிழமை (10) இடம் பெற்ற மரண சடங்கு ஒன்றின் போது பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் அதிக சத்தமாக பட்டாசுகள் வெடிக்கவிடப்பட்டுள்ளன.
நீதிமன்ற நடவடிக்கைகள்
குறித்த சத்தம் காரணமாக பருத்தித் துறை நீதிமன்றத்தில் வழக்குகளை கொண்டு நடத்த முடியாமல் இருந்ததனால் நண்பகல் 11:50 மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் 25 நிமிடங்களின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து நீதிமன்ற பொலிஸார் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
கைது
விரைந்து செய்யப்பட்ட பொலிஸார் பட்டாசு கொளுத்திய இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது இருவரும் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri