சட்டவிரோதமாக மூன்று தேங்காய் பறித்த 2 பேர் கைது
காலி வெக்குனுகொட பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் சட்டவிரோதமாக மூன்று தேங்காய் பறித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நபர்களிடமிருந்து மூன்று தேங்காய்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த கைதான இருவரில் ஒருவர் சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. காணியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கமராவில் சட்டவிரோதமாக தேங்காய் பறிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இது தொடர்பில் காணி உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இந்த சந்தேக நபர்கள் இருவரும், தலா இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுனவெல இவ்வாறு பிணை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri