பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை - அல்லைப்பிட்டியில் இருவர் கைது
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த இருவர் அல்லைப்பிட்டி பகுதியின் இருவேறு இடங்களில் வைத்து கைதாகியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் (16.06.2026) பொதுமக்களின் தகவலுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைதின் போது இருவரிடமிருந்தும் 5200 மில்லிகிராம் மற்றும் 5000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 45 மற்றும் 49 வயதுடைய அல்லைப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை
இது குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் கூறுகையில், வேலணை பிரதேசத்தில் குறித்த இருவரும் மாடு திடுட்டு, களவு மற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக தகவல் கிடைக்கப்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தலைமையில் முன்னெடுக்கப்பட விசேட நடவடிக்கையின் போது அல்லைப்பிட்டி சந்திப் பகுதியில் வைத்து ஒருவரும், அல்லைப்பிட்டி தேவாலய பகுதியில் வைத்து ஒருவருமாக இருவர் கைது செய்துப்பட்டனர்.
இவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனிடையே போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு செயற்படும் நபர்களது தகவல்களை அச்சமின்றி வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri