வவுனியாவில் இருவருக்கு டெங்கு நோய் தாக்கம்
வவுனியாவில் இருவருக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் அவ்வப்போது மழையுடன் கூடிய காலநிலையானது தொடர்கின்றது.
இதனால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் காரணமாக டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டு வருகின்றது.
அந்தவகையில், வவுனியாவின் திருநாவற்குளம் மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் இருந்து இரு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போதைய கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெங்கு நோய் தாக்கமும் ஏற்பட்டுள்ளதால், நுளம்புகள் பெருகாத வண்ணம் பொதுமக்கள் தமது இடங்களை சுத்தமாக வைத்திருந்து நோய் தொற்றில் இருந்து தம்மையும், அயலவர்களையும் பாதுகாத்து கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
