மின்னல் தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள எழுச்சி கிராமம் சுங்கான்கேணி, குளக்கோட்டன் கிராமம் மற்றும் கிண்ணையடி போன்ற கிராமங்களில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் தாங்கள் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் பின்னர் தங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குளக்கோட்டன் கிராமத்தினைச் சேர்ந்த க. தாமோதரம்பிள்ளை (வயது 83) என்ற வயோதிபரும், கு.தவசாந்தி (வயது 30) என்ற குடும்ப தலைவியுமே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
இவர்களது வளவினுள் உள்ள தென்னை மரங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால்
வீட்டினுள் இருந்த மின்சாரப் பொருட்கள் மற்றும் வீட்டு மின்னிணைப்புக்கள் என்பன
சேதமுற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
